2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

எழிலன் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

George   / 2017 மார்ச் 02 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

இறுதி யுத்தத்தில் காணாமற்போன அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் (சின்னத்துரை சசிதரன்) உள்ளிட்ட 5 பேரின் உறவினர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் இன்று ஒத்திவைத்தார்.

குறித்த வழக்கு,இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரச சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதனையடுத்து, வழக்கு விசாரணையை, நீதவான் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

வவுனியா மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணைகள், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற எல்லைக்குள் இந்த சரணடைவு சம்பவம் இடம்பெற்றமையால் நியாயாதிக்க அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .