2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஐயகன்குளத்துக்கு மின்சாரவேலி

George   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

“முல்லைத்தீவு, துணுக்காய், ஐயன்கன்குளம் கிராமத்தில் யானைகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த, மின்சார வேலி அமைக்கப்பட உள்ளது” என,  முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

210 வரையான குடும்பங்கள்  வாழ்ந்து வரும் ஐயன்கன்குளம் கிராமமானது, குடிநீர், போக்குவரத்து பிரச்சனை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இழந்த நிலையில் காணப்படுவதுடன், காட்டு யானைகளின் தொல்லைக்கும் முகங்கொடுத்து வருகின்றது.

இந்நிலையில், இதுதொடர்பில் மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், “ஐயன்கன்குளம் கிராமத்திலும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான், ஐயன்கன்குளம் ஆகிய கிராமங்களில் யானைகளின் தொல்லை தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் ஆராயப்பட்டன. அத்துடன், ஐயன்கன்குளம் கிராமத்தில் யானைகளைக் கட்டுப்படுத்துவதற்கான மின்சார வேலி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .