2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஒதியமலையில் புதிய மாதிரி வீட்டுத்திட்டம்

Niroshini   / 2017 ஜனவரி 23 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்  பிரதேச  செயலகப் பிரிவுக்குட்ப்பட்ட எல்லைக்கிராமமான ஒதியமலையில், புதிய மாதிரி  வீட்டுத்திட்டம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகரசபையால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வீட்டுத்திட்டத்தில், பயனாளிகளுக்கு தலா அரை ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டு ஐந்து இலட்சம் பெறுமதியான வீட்டுத்திட்டம் வழங்கப்படவுள்ளதோடு அடிப்படை  தலா  ஒரு ஏக்கர் வயல் நிலமும் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் முதலாவது வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றபோது, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிறப்பு அடிக்கல் நாட்டி வைத்தார்.
மக்கள் குறைவாக வசிக்கும் இவ்வாறானக் கிராமங்களில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டங்கள் ஊடாக   எல்லைக் கிராமங்கள் பாதுகாக்கப்படுமென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .