சண்முகம் தவசீலன் / 2018 மார்ச் 13 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு நாயாற்று பகுதியில், தொழிலுக்கு சென்ற 3 மீனவர்கள் காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபத்தைச் சேர்ந்த மில்ராஜ் மிரண்டா (வயது 51), இமானுவேல் மிரண்டா (வயது 48), மிதுறதன் மிரண்டா (வயது 24) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (12) அதிகாலை தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதனையடுத்து, நாயாற்று பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் சென்று தேடுதல் நடாத்தியபோதும், குறித்த மூவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மீனவர்களை மீட்க கடற்படையினர் உதவி புரிய வேண்டும் என நாயாற்று பகுதி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago