Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
George / 2017 ஜனவரி 19 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்
2017 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் 2012 ஆம் ஆண்டிக்குரிய தகவல்கள் வெளியிடப்பட்டதால் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன்,நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத் தலைமையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இதன்போது, மாவட்டத்தின் வறுமை தொடர்பில் ஆராயப்பட்ட நிலையில்,மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட புள்ளிவிவரத் தரவுகளில் கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை 12.8 வீதம் எனவும், ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் போசாக்கு மட்டத்தில் 25 ஆவது இடத்தில் இருக்கிறது எனவும் வெளிப்படுத்தப்பட்ட போது இந்தக் கணிப்பீடுகள் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மாவட்ட புள்ளிவிபரவியலாளர் பி.பாலச்சந்திரன், இங்கு காட்டப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் பழையவை. 2012 ஆம் ஆண்டிக்குரிய தகவல்கள். தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2016 ஆண்டின் தகவல்களின் படி கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை வீதம் 20.8 வீதமாக காணப்படுகிறது.
பிரதேசச் செயலகப் பிரிவுகளின் படி கரைச்சியில் 20.36 வீதமும், பச்சிலைப்பள்ளியில் 18.64 வீதமும், பூநகரியில் 22.71 வீதமும், கண்டாவளையில் 21.13 என வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வீதம் காணப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago