2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கட்டுத் துப்பாக்கிகளை தயாரித்தவர் கைதானார்

சண்முகம் தவசீலன்   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில், சட்டவிரோத முறையில் கட்டுத் துப்பாக்கிகளைத் தயாரித்த வீட்டு உரிமையாளர், புதுக்குடியிருப்பு பொலிஸாரால் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, குறித்த வீட்டிலிருந்து 19 கட்டுத்துவக்கு, 3 முழுமையாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 1 கிலோகிராம் வெடிமருந்து, 2,000 துப்பாக்கிக் குண்டுகள், துப்பாக்கி தயாரிக்கும் உபகரணங்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, குறித்த வீட்டை முற்றுகையிட்டு தேடுதல் நடாத்தியபோதே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டு உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .