2025 ஜூலை 12, சனிக்கிழமை

கருக்கலைப்பு சட்டத்திருத்தத்துக்கு கண்டனம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

அனுமதிக்கக் கூடிய வகையில் கருக்கலைப்பை மேற்கொள்ளக் கூடியதான குற்றவியல் தண்டனை சட்டத்தில், திருத்தங்களை செய்ய நீதியமைச்சு தயாராகி வருவதை, தாம்  வன்மையாகக் கண்டிப்பதாக, அமல உற்பவ கன்னி மரியாளின் சமூக மற்றும் கல்விப்பணிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

“குறித்த திருத்தங்களை முன்வைப்பதற்காக, உயர்நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பீ.பி.அலுவிஹார தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை, உடனடியாக கலைக்க வேண்டும், என நாம் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றோம்” என்றும் அவ்வமைப்பு மேலும் கூறியுள்ளது.

இது தொடர்பில், அவ் அமைப்பின் தலைவர் எஸ்.கொண்சன்ரைன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,

“எமது தாய் நாட்டின் கலாசாரத்தையும் அதன் கௌரவத்தையும் சீரழிக்கும் வகையில் அமையப்போகும் இச்சட்டத்தினால்,  எமது தாய் நாடு இறைசாபத்துக்கு உள்ளாகப்போவது உறுதி.

இவ்வுலகில் வாழும் உயிரினங்களுள் மனிதன் மட்டுமே தன் இனத்தை கருவிலிருந்தே அழிக்க முற்படுகின்றான்.

கருக்கலைப்பை மேற்கொள்ளக் கூடியதான குற்றவியல் சட்டத்தில், திருத்தங்களை மேற்கொள்வதைவிட அதற்கு மாற்றீடாக வேறு ஒரு பொறிமுறையை மேற்கொள்வது சிறப்பானதாகவும் நன்மையானதாகவும் அமையும்.

இக் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படுமாயின் அரசாங்காகமே கருக்கலைப்பை ஊக்குவிப்பதாக அமையும்.

எனவே, இம்முயற்ச்சியை உடனடியாக கைவிடும்படி கேட்டுக்கொள்கின்றோம்”  என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் பிரதமருக்கும் நீதியமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .