2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கல்லிருப்பு கண்ணகி அம்மன் கோவில் பொங்கல் இடைநிறுத்தம்

Niroshini   / 2021 மே 09 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

கல்லிருப்பு கண்ணகி அம்மன் கோவிலின்  வருடாந்த பொங்கல் உற்சவம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, கோவில் பரிபாலன சபை தலைவர் பரமநாதன் யோகநாதன் தெரிவித்தார்.

கல்லிருப்பு கண்ணகி அம்மன் கோவிலின் வருடாந்த பொங்கல் உற்சவம், நாளை (10) முதல் 17ஆம் திகதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக, அந்த உற்சவத்தை இடைநிறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

 

இந்நிலையில்,  நாளாந்த பூஜை போல் உற்சப உபயகாரர்கள் 5 பேர் அடங்கிய குழுவுடன், பொங்கல் உற்சவத்தை எளிமையாக நடத்த தீர்மானித்துள்ளதாகவும்,  பரமநாதன் யோகநாதன் தெரிவித்தார்.

.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X