Freelancer / 2022 மார்ச் 20 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்ற வள்ளிபுனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் வானில் கடத்தி செல்லப்பட்ட நிலையில், கடத்தல் காரர்களிடம் இருந்து தப்பி வந்துள்ளார்.
இவர் கடத்தி செல்லப்பட்ட வானுக்குள் இரு சிறுவர்கள் கை,கால்,கட்டப்பட்டு வாய்க்கு பிளாஸ்ரர் ஒட்டப்பட்ட நிலையில் இருப்பதாக தப்பித்த மாணவன் தகவல் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவன் வனப்பகுதி ஒன்றுக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது வானில் இருந்து தப்பி ஓடி நிலையில், அடிகாயங்களுடன் உறவினர் மீட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சேர்த்தனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026