2022 டிசெம்பர் 07, புதன்கிழமை

கிளிநொச்சியில் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி

Freelancer   / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கர்
 
கிளிநொச்சியில் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது. குறித்த போட்டியானது வடக்கு மாகாணம் தழுவி வீரர்களை அடையாளம் காணும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. 

இரணைமடுவிலிருந்து, பரந்தன் வரையான குறித்த மரதன் போட்டியில் 300க்கும் மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்டனர். 

குறித்த போட்டியில் வெற்றி பெற்றவர்களிற்கு பெறுமதி மிக்க பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த போட்டியில் ஆண் குழுவில் கிளிநொச்சியை சேர்ந்த எஸ்.கீரன் முதல் இடத்தினை பெற்றார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த கே.ஜெயந்தன் இரண்டாம் இடத்தினையும், வவுனியாவை சேர்ந்த எஸ்.கிந்துசன் மூன்றாம் இடத்தினையும் பெற்றனர்.

பெண்கள் குழுவில், வவுனியாவை சேர்ந்த எஸ்.கேமப்பிரியா முதல் இடத்தினை பெற்றுக்கொண்டார். முல்லைத்தீவை சேர்ந்த என்.கேமா இரண்டாம் இடத்தையும், எல்.மேரிவினுசா மூன்றாம் இடத்தினையும் பெற்றனர். (R)


dailymirror.lk
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X