Princiya Dixci / 2022 மார்ச் 23 , பி.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்
வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வருடங்களில் காச நோயினால் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் மரணமடைந்துள்ளனர் என வவுனியா மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரவிக்கையில், “உலக காசநோய் தினம், ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 24ஆம் திகதி இடம்பெறுகின்றது. இம்முறை “காசநோயை இல்லொதொழிப்பதற்கு முதலிடுவதன் மூலம் உயிர்களை காப்பாற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் உலக காசநோய் தினம் இடம்பெறவுள்ளது.
“அதனையொட்டி வவுனியா மாவட்ட காச நோய் தடுப்பு பிரிவில் விழிப்புனர்வு செயலமர்வும், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நடை பவணியும் நாளை (இன்று 24) முன்னெடுக்கவுள்ளது.
“வவுனியா மாவட்டத்தில் ஒரு வருடத்தில் 80 தொடக்கம் 90 பேர் வரை காச நோயாளர்களாக இனங்காணப்படுகின்றனர்.
“இம்மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டு 52 பேரும் 2020ஆம் ஆண்டு 47 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
“அத்துடன், 2021ஆம் ஆண்டு இந்நோயினால் 08 பேரும், 2020ஆம் ஆண்டு 07 பேரும் மரணமாகியுள்ளனர். இவ்விறப்புக்களுக்கு காலம் தாழ்த்தி சிகிச்சை பெற்றுக்கொண்டமை முக்கிய காரணமாகும். இந்நோயினை பொறுத்த வரை ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறுமிடத்து இவ்வாறான இறப்புக்களை தடுக்க முடியும்” என்றார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago