எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 ஜனவரி 19 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற நிலையில், காணாமல் போன மீனவரின் சடலம் இன்று (19) மீட்கப்பட்டுள்ளது.
வங்காலை 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சென்ஜோன் குணசீலன் குருஸ் (வயது -50) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர் கடந்த புதன்கிழமை (17) காலை படகு ஒன்றில் மீன்பிடிக்க தனியாக கடலுக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், சக மீனவர்கள் கடலில் தேடிய போது, அவர் சென்ற படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும், தொடர்ச்சியாக இரு தினங்கள் மீனவர்கள் இணைந்து தேடிய போதும், குறித்த மீனவர் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று(19) காலை கடலில் மிதந்த நிலையில் காணப்பட்ட குறித்த மீனவரின் சடலத்தை மீட்டு, மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
சடலத்தை பொறுப்பேற்ற வங்காலை பொலிஸார் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரனைகளை வங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago