Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி – வன்னேரிக்குளத்தில், பொலிஸாரின் காவல் பிரிவை இயங்க வைக்குமாறு கிராம மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் வன்னேரிக்குளத்தில் இருந்து அக்கராயன் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்த மக்கள் வன்னேரிக்குளம் கிராமத்தில் நடைபெறுகின்ற சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் வன்னேரிக்குளம் கிராம மக்கள் வருகை தந்திருப்பதை அறிந்த கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் அக்கராயன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வன்னேரிக்குளம் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கிராமத்தில் தலை விரித்தாடும் கசிப்பு, மரங்கடத்தல், மணல் அகழ்வு உட்பட சகல குற்றச் செயல்களையும் தடுத்து நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பிரதி பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கமைய வன்னேரிக்குளம் கிராமத்தில் பொலிசாரின் நடமாடும் சேவை ஒரு மாதம் நடைபெற்றது.
இந்நிலையில் அக்கராயன் பொலிஸ் நிலையம் தரமுயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் வன்னேரிக்குளம் கிராமத்தில் பொலிஸ் காவல் பிரிவை இயக்குமாறு, இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .