Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 27 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
சபரிகம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், முல்லைத்தீவு மாவட்ட கிராமங்கள் தோறும் அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக, அரசாங்கத்திடம் இருந்து 272 மில்லியன் ரூபாய் நிதியைக் கோரியுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ச.கனகரத்தினம் தெரிவித்தார்.
இதற்கமைய, கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள 46 கிராமங்களின் அபிவிருத்திக்காக 92 மில்லியன் ரூபாயும் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள 19 கிராமங்களின் அபிவிருத்திக்காக 38 மில்லியன் ரூபாயும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள 27 கிராமங்களின் அபிவிருத்திக்காக 54 மில்லியன் ரூபாயும், துணுக்காய் பிரதேசத்தில் உள்ள 20 கிராமங்களின் அபிவிருத்திக்காக 40 மில்லியன் ரூபாயும், மாந்தைக் கிழக்கில் உள்ள 15 கிராமங்களின் அபிவிருத்திக்காக 30 மில்லியன் ரூபாயும், வெலிஓயா பிரதேசத்தில் உள்ள 9 கிராமங்களின் அபிவிருத்திக்காக 18 மில்லியன் ரூபாயும் தேவையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago