Freelancer / 2022 மார்ச் 19 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கர்
கிளிநொச்சி மாவட்டத்தில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன.
நேற்று மாலை 5 மணி நிலவரத்தின் படி செல்வா நகரில் மூன்று வீடுகளும் கிருஷ்ணாபுரத்தில் 5 வீடுகளும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட இடர்முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை மரம் முறிந்து விழுந்ததில் ஒரு வீடு சேதமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
பிற்பகல் 3 மணியளவில் வானிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)
4 hours ago
7 hours ago
13 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
13 Nov 2025