2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

’குடிநீர் வழங்கலுக்கான வாகன வசதிகள் இல்லை’

Niroshini   / 2021 மே 19 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச சபைக்கு, குடிநீர் வழங்கலுக்கான வாகன வசதிகள் இதுவரை கிடைக்கவில்லையென, துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் அ.அமிர்தலிங்கம் தெரிவித்;தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்போது இருக்கின்ற ஒரேயொரு வாகனத்தை வைத்துகொண்டுதான் துணுக்காய், மல்லாவி, தேராங்கண்டல் போன்ற பகுதிகளுக்கான குடிநீர் வழங்கலை மேற்கொண்டு வருகின்றோமென்றார்.

வழமையாக மாவட்டச் செயலகத்தின் இடர் முகாமைத்துவப் பிரிவினரால், கடும் கோடை காலத்தில், குடிநீர் வழங்கலுக்காக வழங்கப்பட்ட வாகன வசதிகள் ஏனைய பிரதேச சபைகளில் காணப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், ஆனால் தமது பிரதேச சபையில் குறித்த வாகனங்கள் மீளப் பெறப்பட்டுள்ன எனவும் கூறினார்.

தமது பிரதேச சபை எல்லைப் பரப்புக்குள் தற்போது எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில், குடிநீர் நெருக்கடி காணப்படுகின்ற போதிலும், குடிநீர் வழங்கலை மேற்கொள்வதற்கான வாகன வசதிகள் இல்லையென்றும் கூறினார்.

'இது தொடர்பில் மாவட்டச் செயலகத்துக்கும் பிரதேச செயலகத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். வாகன வசதிகள் கிடைத்தால் உடனடியாக குடிநீர் வழங்கலை மேற்கொள்வோம்' என்று, அ.அமிர்தலிங்கம் தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .