Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு, குமுழமுனை, குருந்தூர் மலை தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக உத்தரவைத் தளர்த்துவதா அல்லது நீடிப்பதா என, 1ஆம் திகதி நீதிமன்றம் முடிவெடுக்குமென்று, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.டெனிஸ்குமாரால் தெரிவிக்கப்பட்டுள்ளதென, மூத்த சட்டத்தரணி ரி.பரஞ்சோதி தெரிவித்தார்.
குருந்தூர் மலை தொடர்பில், தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் ஊடான வழக்கு விசாரணை, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.டெனிஸ்குமார் முன்னிலையில், இன்று (27) எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, எதிர்வரும் 1ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்தும் முழுமையான அறிக்கையொன்றைத் தயாரித்து, மன்றில் சமர்ப்பிக்க வேண்டுமென, பொலிஸாருக்கு உத்தரவுப்பிறப்பித்தார்.
வழக்கு விசாரணை நிறைவடைந்ததன் பின்னர், இது தொடர்பில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, மூத்த சட்டத்தரணி ரி.பரஞ்சோதி, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்துக் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 13ஆம் திகதியன்று, குருந்தூர் மலைக்கு மக்கள் சென்று வரலாம் எனவும் அங்கு எந்த வித மாற்றங்களும் செய்யமுடியாது எனவும், நீதிமன்றத்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவானது மறு தவணை வரை எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அன்றைய தவணையில், வழக்குத் தாக்கல் செய்து அறிக்கையைச் சமர்ப்பிக்கும் பொலிஸார், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்தும் முழுமையானதோர் அறிக்கை தயாரிக்கப்பட்டு, மன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று, நீதவான் உத்தரவிடுள்ளார்.
அதன்பின்னர், தற்காலிக உத்தரவைத் தளர்த்துவதா அல்லது நீடிப்பதா என நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று, நீதவானால் தெரிவிக்கப்பட்டுள்ளதென, அவர் மேலும் கூறினார்
34 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago