Niroshini / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க. அகரன்
வவுனியா மாவட்டத்தின் கொரோனா நிலைமைகள் தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க முடியாதென, வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான கலந்துரையாடலொன்று, வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், நேற்று (28) நடைபெற்றது.
இதன்போது, மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்பான உத்தியோகபூர்வமான தகவல்களை ஊடகவியலாளர்களுக்கு வழங்குமாறு கோரப்பட்டிருந்தது.
அதனை மறுத்த அதிகாரிகள், அவ்வாறு தகவல்களை வழங்குவதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என்றும் மீறி வழங்கினால் தாம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவோம் என்றும் தெரிவித்தனர்.
ஆயினும் வடக்கின் ஏனைய மாவட்டங்களில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் ஊடக சந்திப்புகளின் மூலம், மாவட்டத்தின் கொரோனா நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றமை தொடர்பாக ஊடகவியலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும், அவ்வாறான தகவல்களை வழங்கமுடியாது என்று, வவுனியா சுகாதாரசேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பான உத்தியோகபூர்வமான, உண்மையான தகவல்களை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதில் ஊடகவியலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago