2025 மே 17, சனிக்கிழமை

கொரோனா தொடர்பில் கலந்துரையாடல்

Editorial   / 2020 மார்ச் 17 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், கொரோனா வைரஸ் நோய் தொடர்பான அவசர கலந்துரையாடலொன்று, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில், நேற்று (16) நடைபெற்றது.

மாவட்ட செயலக மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்,  பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் சகல துறையினரும்  பொறுப்புடன் செயற்படுமாறும் குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் கூடுவதை இயன்ற அளவு குறைத்து கொள்ளுமாறும்  தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், இது தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பொருட்டு, துண்டுப்பிரசுரங்களை வழங்குதல், ஒலி பெருக்கிகள் மூலம் அறிவுறுத்தல்களை  வழங்குதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில், மேலதிகச் செயலாளர், கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகியவற்றின் பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்று நோயியல் பிரிவு வைத்தியர் நிரல் அருமைநாதன்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், இராணுவ உயரதிகாரிகள் பொலிஸார் எனப் பலர் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து கடந்த மார்ச் முதலாம் திகதிக்குப் பின்னர் வருகை தந்தவர்கள் பற்றிய விவரங்களை, மிக வேகமாகத் திரட்டுமாறு, மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதே செயலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்

அவ்வாறு திரட்டுவதன் மூலம் அவர்கள்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார் 

இவ்வாறான தகவல்களை பொது மக்கள் வழங்குவதன் மூலம் அவர்கள் இவ்வாறான தொற்றுக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்கு சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும், தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .