Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
சண்முகம் தவசீலன் / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவிஸில். பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சுப்ரமணியம் கரனுடைய வழக்கை, நேரடியாகத் தாங்கள் பார்வையிட வேண்டும் என அவருடைய உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைக்கான சுவிஸ் தூதுவராலயத்தின் அதிகாரி சுசந்தி கோபாலகிருஸ்ணன், கரனுடைய வீட்டுக்குச் சென்றபோதே, உறவினர்கள் அவரிடம் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
சுவிஸில் சுட்டுக்கொல்லப்பட்ட கரனின் மேலதிக விபரங்கள் கொழும்பிலுள்ள அலுவலகத்துக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவித்த சுசந்தி கோபாலகிருஸ்ணன், இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குடும்பத்தினருடைய தேவைகள் தொடர்பிலும் சுசந்தி கோபாலகிருஸ்ணன் வினாவியுள்ளார். இதன்போது, சுவிஸில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளை கரனுடைய குடும்பத்தினர் பார்வையிட வேண்டும் என கரனுடைய உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக தூதரகத்துக்கு தான் தெரிவித்து, பதிலை தெரிவிப்பதாக குடும்பத்தினருக்கு சுசந்தி கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த கோரிக்கையை எழுத்து மூலமாக அனுப்பி வைக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
5 hours ago
5 hours ago