2025 மே 19, திங்கட்கிழமை

கொழும்பு – மன்னாருக்குச் சென்ற பஸ்ஸில் ரூ. 10 மில். ஹெரோய்ன் மீட்பு

Editorial   / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா – செட்டிகுளம் பகுதியில், நேற்று (30) இரவு 10.30 மணியளவில், இராணுவத்தினரும் பொலிஸாரும் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின்போது, தனியார் பஸ்ஸில் இருந்து 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றில் இருந்தே, இவ்வாறு ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் போது, சந்தேகத்தின் பேரில் முழங்காவில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞன்,  கடந்த நான்கு தினங்களுக்கு முன்னரே மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து இலங்கைக்கு வந்ததுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X