2025 மே 09, வெள்ளிக்கிழமை

கௌதாரிமுனையில் 1,200 கிலோ மஞ்சள் மீட்பு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

-மு.தமிழ்ச்செல்வன் 

கிளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனை பகுதியில், 1,200 கிலோகிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளன.


 பூநகரி பொலிஸாரின் விசேட புலனாய்வு விசாரணை பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, சந்தேகத்துக்கிடமான கூலர் வானத்தை இடைமறித்து சோதனை மேற்கொண்டபோதே, வாகனத்தில் இருந்து மஞ்சள் மூடைகள்  மீட்கப்பட்டன.
 
இதன் போது, சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கௌதாரிமுனை கடற்பரப்பில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட இந்த மஞ்சளை தொகை, அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் வாகனம் என பதாதைகளை ஒட்டி  கூலர் வாகனத்தில் நீர்கொழும்புக்கு ஏற்றி செல்லப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X