Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2015 நவம்பர் 06 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம் மக்களால் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் கடழிப்பு மற்றும் சட்டவிரோத மீள்குடியேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கென குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், குறிப்பிட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிர், நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
'வடக்கு மாகாண சபையின் 37ஆவது அமர்வு கைதடியிலுள்ள மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்றது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத காடழிப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் விஷேட பிரேரணையொன்றை முனவைத்து உரையாற்ற்pனார்.
முல்லைத்தீவு- குமுழமுனை குமாரபுரம் பகுதியில் திட்டமிட்ட குடியேற்றத்துக்காக பெருமளவு காடுகள் கேட்பார் இன்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறன.
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவு எல்லைக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் சுமார் 600 ஏக்கர் வரையிலான காடுகள் திட்டமிட்டு அழிக்கப்படுவது தொடர்பாக வடமாகாண காணி அமைச்சரும் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறித்த பிரேரணையை முன்வைத்து மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் உரையாற்றினார்.
எனினும் மாகாண சபை உறுப்பினர் ரவிகரனின் குற்றச்சாட்டுகள் அத்தனையையும் மறுத்த நான், குறித்த பிரதேசத்தில் எந்தக் காடுகளும் முஸ்லிம் மக்களினால் அழிக்கப்படவில்லை எனவும் யுத்த காலத்தின் போது இடம்பெற்ற இடப்பெயர்வினால் பெருங் காடுகளாக காட்சியளிக்கும் தமது சொந்தக்காணியையே முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் மக்கள் துப்பரவு செய்து வருவதாகவும் கூறி தெளிவுபடுத்தினேன்.
இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர், இந்த விடயம் தமிழ்-முஸ்லிம் நல்லுறவில் விரிசலை ஏற்படுத்துவதாக இருப்பதால் இதுவிடயத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
மேற்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் காடழிப்பு தொடர்பாக குழுவொன்றை நியமித்து அதுபற்றி முழுமையான அறிக்கையொன்றை பெற்றதும் அடுத்த அமர்வில் பேசலாம் எனவும் முதலமைச்சர் இதன்போது கூறி அமர்ந்தார்.
இந்நிலையில் முல்லைத்தீவு காடழிப்பு பற்றிய பிரேரணை அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் வாழும் தமிழ்-முஸ்லிம் மக்கள் நல்லுறவோடு வாழ்ந்து வருகிறார்கள். இதில் விரிசல்களை ஏற்படுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விடயத்தில் வடக்கு முதலமைச்சர் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்க நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பார் என அந்த மக்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்' என யாசின் ஜவாஹிர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
51 minute ago
59 minute ago