2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

குடிநீருக்கு தட்டுப்பாடு

George   / 2017 மே 10 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, முத்தையன்கட்டுக் குளத்தின் நீர் மட்டம் குறைவடைந்ததன் காரணமாக, கிணறுகளின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து,  குடி நீர் நெருக்கடியினை  எதிர்கொண்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்குளத்தின் 4 ​அடி வரையில் நீர் மட்டம் காணப்படுவதன் காரணமாக சிறுபோக நெற்செய்கையும் இடம்பெறவில்லை.

இதன்காரணமாக வசந்தபுரம், பேராறு, கற்சிலைமடு ஆகிய கிராமங்களின் மக்களும் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். கற்சிலைமடுக் கிராமத்தில் 3 பொதுக் கிணறுகளும் 5குழாய்க் கிணறுகளும் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதன் காரணமாக கிணற்றில் இருந்து நீரைப் பெற முடியாது உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, முத்தையன்கட்டுப் பகுதியில் உள்ள ஆற்றுப்படுகைகளில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மணல் அகழ்வு காரணமாகவும், கிணறுகளின் நீர் மட்டம் குறைவதாக மக்கள் கூறுகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .