Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2017 ஜனவரி 23 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, துணுக்காய் ஐயன்கன்குளத்தில் குடிநீர்த் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துமாறு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வரட்சியான காலங்களில் தமது கிராமம் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொள்கிறது. நீர் நிலைகளைத் தேடி நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதுடன் குடிநீருக்கும் குளிப்பதற்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய எமது கிராமத்தில் போக்குவரத்து,மருத்துவம் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளற்று வாழ்ந்து வருகின்றோம். 210 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வரும் இக்கிராமத்தில், யானைகளின் தொல்லையால் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்படுகின்றன என இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago