2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கொடும்பாவி எரிப்பு தவறு: அடைக்கலநாதன்

Gavitha   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமை மனவருத்தத்தை தருகின்றது என்று தெரிவித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்களால், வட மாகாணத்தின் பல இடங்களிலும் வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமை தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'கருத்துக்களை கருத்துக்களால் பேசி தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டிய நிலையில், ஒருவருடைய மனதை நோகடிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுதல் தவிர்க்கப்படல் வேண்டும்.

எனவே ஒரு சில விரோதங்களுக்காகவும் பேசித்தீர்க்க வேண்டிய விடயங்களுக்கு பாரிய ஏற்றுக்கொள்ளமுடியாத செயற்பாடுகளை முன்னெடுப்பது மனவேதனையை ஏற்படுத்துகின்றது.

இந்நிலையில், வட மாகாண போக்குவரத்து அமைச்சர் தளர்ந்து போகாது, தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வட மாகாணத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக தொடர்ந்தும் செயற்படவேண்டும்' என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .