2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

காணிகள் விடுவிக்கப்பட்டும் 'குடியேற வழியில்லை'

George   / 2017 மே 10 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“முள்ளிக்குளம் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு, மக்கள் கிராமத்துக்குச் சென்று 10 நாட்கள் சென்றுள்ள நிலையில், சொந்த காணிகளில் குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என,  முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்டன் தவராசா தெரிவித்தார்.

முள்ளிக்குளம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்  அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்ட இடங்களில் இரண்டு நாட்களுக்கு பிறது, விரும்பிய இடங்களில் குடியமர முடியும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், 10 நாட்கள் கடந்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பதில் தாமதம் நிலவுகின்றது. இதனால், மக்களுக்கு நம்பிக்கையற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முள்ளிக்குளம் ஆலயத்தில் இருக்கும் மக்கள், தமது சாதாரண வாழ்க்கையை வாழ முடியாத நிலையில் உள்ளனர்.
மக்களுக்கு போதிய அளவு மலசல கூட வசதி, குடி நீர் வசதிகள் உள்ளிட்ட தேவைகள் இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

தமது சொந்த காணிகளில் சிறிய கொட்டில்களை அமைத்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கின்றார்கள்.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக, அவர்களின் காணிகளில் குடியமர்த்த  உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .