2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

காணாமல் ஆக்கப்பட்ட 115 பேரின் விவரங்கள் கையளிப்பு

George   / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

காணாமல் ஆக்கப்பட்ட 115 பேரின் விவரங்களை வட மாகாண சுகாதார அமைச்சரிடம் காணாமல்  ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்று மதியம் கையளிக்கப்பட்டது.

கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்ட இடத்துக்கு, அண்மையில் மத்திய சுகாதார அமைச்சர், வட மாகாண சுகாதார அமைச்சரின் அழைப்பின் பேரில் வருகை தந்திருந்தார்.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் கலந்துரையாடிய அவர் வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் விவரங்களை தனக்கு வட மாகாண சுகாதார அமைச்சரின் ஊடாக வழங்குமாறும் தன்னாலான உதவிகளை செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில், ஒருவாரத்தில் இவ் விவரங்களை கையளிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்திருந்த நிலையில், இரு வாரங்கள் கழித்து வட மாகாண சுகாதார அமைச்சரிடம் 115 பேரின் விவரங்களை நேற்று கையளித்துள்ளனர்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த வடக்கு சுகாதார அமைச்சர், இவ் விவரங்களை எதிர்வரும் 27 ஆம் திகதி மத்திய சுகாதார அமைச்சரிடம் தான் கையளிக்கவுளதாக கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .