2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

காணியளவீடு ​செய்ய அதிகாரிகள் வரவில்லை

George   / 2017 ஜனவரி 31 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பகுதியில் இலங்கை இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள  மக்களின் காணிகளை இன்று, நில அளவீடு செய்து தருவதாக மக்களிடம், தெரிவிக்கப்பட்ட நிலையில், குறித்த இடத்துக்கு மக்கள் வந்து காத்திருந்த ​போதும், அதிகாரிகள் வரவில்லை.

முல்லைத்தீவு, கேப்பாபுலவு,  கரைதுரைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புலக்குடியிருப்பு கிராமத்தில், 64 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் காணப்படுகின்றன.

அவற்றில் தங்களை மீள்குடியேற அனுமதிக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில்,  பிரதேச செயலக  அதிகாரிகள், கிராம அலுவலர் ,வனவள பாதுகாப்பு திணகை்கள அதிகாரிகள் ஆகியோர் குறித்த பகுதியை கடந்த 23ஆம் திகதி பார்வையிட்டனர்.

அதன்போது, அவை பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்துக்குரிய காணிகள் எனவும், அந்தப்பகுதிக்குரிய வரைபடத்துடன் எதிர்வரும் 31ஆம் திகதி குறித்த  பகுதிக்கு சென்று, வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு அடையாளப்படுத்தி, உரிய மக்களுக்கு காணிகளை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக, பிரதேச செயலாளர் உறுதியளித்திருந்தார்.

படையினரின் வசமுள்ள காணி என்பதால், அதனை விடுவிக்குமாறு மக்கள், கேட்ட போது, வன வளப் பாதுகாப்பு திணைக்களத்தினடம்  கடிதம்  பெற்றுவருமாறு, படையினர் கோரியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கடிதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வனவள பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுன், அங்கு வருவதா பிரதேச செயலாளர் வாக்குறுதியளித்திருந்தார்.

இன்றைய தினம் காலை முதல், மக்கள் அங்கு சென்று காத்திருக்கும் நிலையில், அதிகாரிகள் யாரும் வரவில்லை். பிரதேச செயலாளரிடம் தொடர்புக்கொண்டு கேட்போது, வன வள திணைக்கள அதிகாரிகள், வழக்கொன்றுக்குச் சென்றதால் இன்று வரமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

எனினும்,  மக்கள் கடிதம் பெற்றுக்கொடுக்கும் வரை செல்லமாட்டோம் என, அங்கு நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .