2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கோணாவில் கிராமத்தில் குடிநீர் நெருக்கடி

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி கோணாவில் கிராமத்தில் நிலவும் குடிநீர் நெருக்கடி காரணமாக, மக்கள் அவலங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் 1,100க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட இக்கிராமத்தில், நீண்டகாலமாகவே குடிநீர் நெருக்கடி நிலவி வருகின்றது.

கோடை காலங்களில் கிணறுகளில் நீர் வற்றுகின்ற போது, 3 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள புதுமுறிப்புக் குளத்துக்கே, மக்கள் குளிப்பதற்குச் செல்கின்றனர்.

இக்கிராமத்தினை மையப்படுத்தி, குடிநீர்த் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துமாறு, இக்கிராம மக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காந்தி கிராமம், கோணாவில் மத்தி, இராஜன் குடியிருப்பு ஆகிய பகுதி மக்களே, கூடுதலாக நீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். இக்கிராமத்தில் கூடுதலாக பொதுக் கிணறுகளை அமைப்பதன் மூலமும், குடிநீர் நெருக்கடிக்கான தீர்வினை வழங்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .