Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Niroshini / 2017 ஜனவரி 01 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜெகநாதன்
கடந்த 25ஆம் திகதி முல்லைத்தீவு கரைத்துறைப்பற்றில் மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டமை கண்டிக்கத்தக்க செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த 25ஆம் திகதி முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்றில் மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டமை மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இது மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்த கோட்சேயின் கொடிய செயலை விட கொடுமையானதும் கோழைத்தனமானதுமாகும். காந்தி இந்திய விடுதலை போராட்டக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்து விடுதலையுணர்வை ஊட்டியவர். அப்பேர்ப்பட்ட காந்தியின் சிலையை உடைத்தமை கண்டிக்கத்தக்கது.
கடந்த மே மாதம் 16ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய பண்டார வன்னியன், வள்ளுவர், பாரதி, மகாத்மா காந்தி முதலான 8 சிலைகள் அமைக்க 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அத்தீர்மானத்துக்கு அமைய அமைக்கப்பட்ட சிலையை உடைத்தமை உள்நோக்கம் கொண்ட மூடச்செயல் ஆகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago