Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2017 மார்ச் 04 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள், தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி, கேப்பாபுலவில் அமைத்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையகத்துக்கு முன்பாக நேற்று மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள், கேப்பாப்புலவின் பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்தின் பிரதான வாயில் முன்பாக காலை 11.30 மணியளவில் திரண்டு இராணுவத்துக்கு எதிராக கோசம் எழுப்பி தமது சொந்த நிலங்களை எம்மிடம் தாருங்கள் என கண்ணீர் மல்க கதறி அழுது போராட்டத்த்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மக்களின் போராட்டம் காரணமாக சிறிதுநேரம் குறித்த வாயில் ஊடாக மேற்கொள்ளப்படும் இராணுவத்தினரின் போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக குறித்த பகுதிக்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுடன் கலந்துரையாடி வீதியினை மறிக்க வேண்டாமென கேட்டுக்கொண்டதோடு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போராட்டத்தை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்தது மக்கள் வீதியை விட்டுவிலகி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு, நேற்று முழுவதும் கனமழை பொழிந்து வரும் நிலையில் மக்கள் தளராது மழைக்கு மத்தியிலும் வீதியோரத்தில் அமர்ந்து போராடினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago