Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 27 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம், 27ஆவது நாளாகவும் நேற்று (26) தொடர்ந்தது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம், விமானப்படைத் தளத்துக்கு முன்பாக, வீதி ஓரத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வீதியோரத்தில் கொளுத்தும் வெயில், கொட்டும் பனிகளையெல்லாம் தாண்டி சொந்தமண்ணில் கால்பதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்த மக்களின் அறவழிப் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில், இந்த மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக, பிலவுக்குடியிருப்பு விமானப்படை முகாமுக்கு முன்பாக நேற்று (26) ஒன்றுதிரண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தினர், புளியங்குளம் இளைஞர் அணியினர், யாழ். பல்கலைக்கழக கலைப்பிரிவு மாணவர்கள், மொரட்டுவை பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள், இலங்கை முதலுதவிச் சங்க உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், நலன்விரும்பிகள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்
கேப்பாப்புலவு மக்களின் நிலங்களை உடன் வழங்கு. எமது நிலம் எமது வயல் எமது காடு. வீதி ஓரமே எமது வாழ்விடமா? எங்கள் நிலம் எமக்கு வேண்டும். தீர்வு கிடைக்கும்வரை தொடரும் எமது போராட்டம் என பல்வேறான கோஷங்களையும் எழுப்பினர்.
இதேவேளை, வெளியேறு! வெளியேறு! இராணுவமே! வெளியேறு, இதுவா நல்லாட்சி அரசாங்கம்? தமிழர் வீதியிலே சாவதா? எமது நிலம் எமக்கு வேண்டும். கேட்பார் இல்லையென நினைத்தாயோ உள்ளிட்ட வாசகங்களை எழுதிய பதாகைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தாங்கிநின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago