Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2017 பெப்ரவரி 11 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சியில் தற்போது காலபோக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், அறுவடை செய்த நெல்லை உலர வைப்பதற்கான போதியளவு உலரவிடும் தளம் இன்மையால், இவ்வருடமும் காபெற் வீதிகளில் நெல் உலர விடும் அவலம் தொடர்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நெல் உலர வைப்பதற்கான தளங்கள் இல்லாததன் காரணமாக, வீதிகளில் நெல்லை காய வைக்கும் செயற்பாட்டில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயக் குழுக் கூட்டங்களில் நெல் உலர வைப்பதற்கான தளங்கள் இல்லாததன் காரணமாகவே ஈரமாக நெல்லை விற்பனை செய்வதாகவும் ஒவ்வொரு கமக்கார அமைப்புக்கும் குறைந்தது நெல் உலர வைப்பதற்கான ஒரு தளத்தினையாவது அமைத்துத் தாருங்கள் என்று, விவசாயிகளினால் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அவை நிறைவேறாததன் காரணமாகவே, விவசாயிகள் நெல்லினை வீதிகளில் உலர வைக்கின்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கடந்த வருடங்களிலும் இந்த நிலைமை தொடர்ந்தது.
இந்த நிலைமையினால், கடந்த காலங்களில் பல வீதி விபத்துகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
8 hours ago