2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கால்நடைகளின் உறைவிடமாக மாறிய முசலி சந்தை

George   / 2016 மே 19 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  சிலாவத்துறை மீள் குடியேற்றத்திட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முசலி பிரதேசத்துக்குச் சொந்தமான சந்தை, கடந்த பல மாத காலமாக பராமரிப்பற்ற நிலையில் இருப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்டத்தின் ஊடாக பணம் ஓதுக்கீடு செய்து முசலி பிரதேச சபையின் ஊடாக அமைக்கப்பட்ட குறித்த சந்தை, இது வரைக்கும் யாருக்கும் பயன் இல்லாமல் ஆடு, மாடுகள் உறைவிடமாக இருந்து வருகின்றது.

முசலி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தன்னுடைய சுய நலத்துக்காக குறித்த பகுதியில் சந்தை தொகுதியை கட்டியதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பல இலட்சம் ரூபாய் செலவில் மக்கள் பணத்தில் அமைக்கப்பட்ட குறித்த சந்தை தொகுதி  கட்டடங்கள் இது வரைக்கும் முசலி பிரதேச சபை பராமரிக்காமல் அசமந்த போக்கில் செயற்படுகின்றது.

எனவே, இவ் விடயத்தில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி இந்த பிரதேசத்துக்குரிய சொத்துகளை பாதுகாக்குமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X