2025 ஜூலை 12, சனிக்கிழமை

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 24 பேர் வைத்தியசாலையில் (UPDATE)

George   / 2017 ஜனவரி 23 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு விஸ்வமடு விஸ்வநாதர் வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள, வளாகத்திலிருந்த குளவிக்கூடு, இன்று  கலைந்து, கொட்டியதில் 24 பேர் பாதிக்கப்பட்டு தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, மரமொன்றில் இருந்த குளவிக்கூடு, கடுமையான காற்றுக்காரணமாக கலைந்து, பாடசாலை வகுப்பறைகளுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை கொட்டியதில் 12 பேர் காயமடைந்தனர்.

பாடசாலையின் ஆசிரியர், 8 மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மூவரே  இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

இதனையடுத்து, 11.30 மணியுடன் பாடசாலை மூடப்பட்டது. எனினும், மாணவர்கள் வீடுகளுக்குச் செல்வதற்காக வகுப்பறைகளை விட்டு வெளியேறிய போது மேலும் 12 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .