Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Niroshini / 2017 ஜனவரி 22 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி நகர அபிவிருத்தி மற்றும் நகரை மையமாகக்கொண்டு வெளிச்சுற்றுவட்ட வீதிகளை அமைப்பது தொடர்பாக, நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், இடங்களைச் சென்று பார்வையிட்டுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுடன் கலந்துரையாடியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டமானது, நகர வடிவமைப்பை கொண்டிருக்காமல் கிளிநொச்சி ஏ-9 வீதியின் பரந்தன் சந்தி முதல் இரணைமடுச்சந்தி வரையான பகுதியை உள்ளடக்கி தொடர் வர்த்தக நிலையங்கள் பொதுக் கட்டடங்களைக் கொண்டு காணப்படுகின்றது.
1,237 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக்கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில், நகர அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 31 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் 2,010 ஹெக்ரேயர் பிரதேசம் நகரத்துக்கான பகுதியாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
எனினும், ஏ-9 வீதிக்கு செல்லும் வகையில், பல கிராமங்களை உள்ளடக்கி வெளிச்சுற்று வட்ட வீதிகள் அமைக்கப்படவுள்ளன.
ஆனையிறவில் இருந்து தட்டுவன் கொட்டி பழைய கண்டிவீதி வழியாக இரணைமடுச்சந்தி வரைச்சென்று,ஏ-9 வீதியுடன் இணையும் வெளிச்சுற்று வட்ட வீதியை அமைப்பது உள்ளிட்ட விடயங்கள்,குறித்து இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago