Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Gavitha / 2016 ஜூன் 14 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிஜோபன்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு 49838 பேருக்கு மலேரியா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி பிராந்திய மலேரியா கட்டுப்பாட்டு இயக்கத்தின் மருத்துவ பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி ம.ஜெயராசா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'கிளிநொச்சி மாவட்டத்தில் 2013க்கு பின்னர் மலேரியா நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பான தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன. வைத்தியசாலைக்கு காய்ச்சல், சாதாரண சிகிச்சைகளுக்காக வருகின்ற நோயாளிகளிடமிருந்து குருதிபடலங்கள் பெறப்பட்டு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் கடந்த 2015ஆம் ஆண்டு 49,838 பேரிடம் இவ்வாறு இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட யாரும் கண்டறியப்படவில்லை. எனினும் தொடர்ச்சியாக மலேரியா தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்று கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Jul 2025