Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 மார்ச் 20 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
“நில மெஹெவர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தை, கிளிநொச்சியில் முன்னெடுக்கும் வகையில், அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வு, கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது.
கிளிநொச்சி, இரணைமடு தாமரை தடாகம் மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கலந்துகொண்டு உரையாற்றினார்.
மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், அலுவலர்களிடம் மக்கள் செல்வதற்கு பதிலாக, அதிகாரிகள் மக்களிடம் வந்து பிரச்சினைகளை தீர்க்கும் வகையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக, “நில மெஹெவர” ஜனாதிபதி மக்கள் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு முதலாவது “நில மெஹெவர” சேவை, பொலனறுவை மாவட்டத்திலும் இரண்டாவது, காலி மாவட்டத்திலும் நடைப்பெற்றதுடன் மூன்றாவதாக கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் நான்கு “நில மெஹெவர” ஜனாதிபதி மக்கள் சேவை இடம்பெற்று, இறுதி நிகழ்வும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அடையாள அட்டை, பிறப்பு விவாக, மரணச் சான்றிதழ்கள், சாரதி அனுமதி பத்திரம். ஒய்வூதிய திணைக்கள சேவைகள், வீட்டுக் கடன் பெற்றுக்கொள்ளல், முதியோர் அட்டைகள் பெற்றுக்கொள்ளல், காணி உரிமம், வேலைவாய்ப்பு, சமூர்த்தி ஓய்வூதிய கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, இதன்போது பெற்றுக்கொள்ள முடியும்” என, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago