2025 ஜூலை 12, சனிக்கிழமை

கிளிநொச்சியின் பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு கோரிக்கை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என். நிபோஜன்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாது இருக்க வேண்டுமெனில், கிளிநொச்சி மாவட்டத்தின் பாதுகாப்பைப்  பலப்படுத்த வேண்டுமென, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியொருவர், பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் தற்போதுள்ள பாதுகாப்புக் குறைவாக உள்ளதாகவும், அண்மையில் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள்  நடைபெற்றுவருகின்ற வேளையில், அவர்கள் பல திட்டங்களை வைத்திருந்தார்கள் எனத் தெரியந்துள்ளதாகவும், இவற்றையெல்லாம் அவர்கள் செய்வதற்குக் காரணம், கிளிநொச்சியில் பாதுகாப்புப் பலமாக இருக்கவில்லை என்பதேயாகும் என்றும், அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாது இருக்க வேண்டுமெனில், கிளிநொச்சி மாவட்டத்தின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட வேண்டுமென, பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய கடிததத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .