Menaka Mookandi / 2016 ஜூலை 28 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில், இன்று வியாழக்கிழமை இடம்பெற்றபோது, யுத்த காலத்தில் சேதமடைந்த உவர்நீர்த் தடுப்பணைகளால், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலம், உவர் நிலமாக மாற்றமடைந்துள்ளமை தொடர்பில் ஆராயப்பட்டது.
மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, கரியாலை நாகபடுவான் மற்றும் குமிழமுனை ஆகிய பகுதிகளில் உவர்நீர்த் தடுப்பணைகள் சேதமடைந்தமையால், அந்தக் கிராமங்களுக்குள் உவர்நீர் உட்புகுந்து, அக்கிராமங்களின் விவசாய நிலங்கள், உவர் நிலமாக மாற்றமடைந்த தொடர்பிலும் அதனைத் தொடர்ந்து, குடிநீர்க் கிணறுகளும் உவர் நிலமாக மாற்றமடைந்தமை குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
இதனைத் தடுப்பதற்கு, அரச சார்பற்ற அமைப்புக்கள் முன்வந்து, உவர்நீர்த் தடுப்பணைகளை அமைப்பதற்கும், உவரடைந்த பிரதேசங்களின் உவர்த்தன்மையை போக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. நிலம் உவரடைந்து போவதால், விவசாய மாவட்டமான கிளிநொச்சியில் பல விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் போவது தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் சுட்;டிக்காட்டப்பட்டது.
இந்நிகழ்வில், குறிப்பாக யூ.என்.டி.பி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும், நிறைவு செய்யப்பட்ட வேலைத்திட்டங்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.சத்தியசீலன், யு.என்.டி.பி நிறுவனத்தின் பிரதிநிதிகள், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் என்.தயாரூபன், திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
2 minute ago
10 minute ago
26 minute ago
01 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
10 minute ago
26 minute ago
01 Dec 2025