Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 மே 16 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
தற்போது நாடாளவிய ரீதியில் பெய்து வரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், கனகாம்பிகைக்குளம் வான் பாய்வதாகவும் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஜி.செந்தூரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு தொடக்கம், இரணைமடுப் பகுதியில் 300 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் அக்கராயன் பகுதியில் 200 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. இதனால் மாவட்டத்தின் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இரணைமடுக்குளம் 16 அடி 3 அங்குலமாகவும் அக்கராய்ன குளம் 24 அடியாகவும் கரியாலைநாகபடுவன் 7 அடி 3 அங்குலமாகவும் கல்மடுக்குளம் 22 அடி 06 அங்குலமாகவும் கனகாம்பிகைக்குளம் 11 அடி 10 அங்குலமாகவும் (1 அடி வான் பாய்கின்றது) வன்னேரிக்குளம் 9 அடி 3 அங்குலமாகவும் புதுமுறிப்புக்குளம் 19 அடி 3 அங்குலமாகவும் பிரமந்தனாறுக் குளம் 10 அடி 4 அங்குலமாகவும் குடமுறுட்டுக்குளம் 6 அடி 11 அங்குலமாகவும் நீர்மட்டம் காணப்படுகின்றது.
தொடர்ந்து, மழை பெய்தால் இந்தக் குளங்கள் வான் பாய்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
மேலும், இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் இடம்பெறுவதால், அந்தக் குளத்தில் நீர் சேகரிக்கப்படவில்லையென அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
34 minute ago
1 hours ago