Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 484 வழக்குகளுடன் தொடர்புபட்டவர்கள் சமுதாயம்சார் சீர்திருத்த கட்டளைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட பலர் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தினால் சமுதாயம் சார் சீர்திருத்த கட்டளைச்சட்டத்தின் கீழ், சமுக சேவைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு சமுக சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருபவர்களுக்கு அவர்கள் எதிர்காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடாத வகையில் திருந்தி வாழ்வதற்கும் சுயதொழில்களை மேற்கொள்வதற்கும் நீதிமன்ற கட்டளைகளுக்கு அமைவாக விழிப்புணர்வு கருத்தரங்குகள் தொழில்சார் பயிற்சிகள் என்பனவும் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வருடத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் சமூக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதாவது, சடடவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் தொடர்பிலான 186 வழக்குகளுடன் தொடர்புபட்டவர்கள், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்திச் சென்றமை தொடர்பான சுமார் 109 வழக்குகளுடன் தொடர்புபட்டவர்கள் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பான 47 வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் உள்ளடங்கலாக சுமார் 484 வழக்குகளுடன் தொடர்புபட்டவர்கள் இவ்வாறு சமூதாயம் சார் சீர்திருத்த கட்டளைக்கு அமைவாக சமூக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எதிர்காலத்தில் திருந்தி வாழ்வதற்கும் ஒரு சந்தப்பமாகவே சமுதாயம் சார் சீர் திருத்த சட்டத்தின் கீழான சேவைகள் வழங்கப்படுகின்றன.
எனவும் இதனை அவர்கள் சரியாகப்பயன்படுத்தி எதிர்காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடாத வகையில் வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்;தர் எஸ்.றொசாந் தெரிவித்துள்ளார்.
40 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
1 hours ago