சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 மார்ச் 23 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பூநகரிக் கடற்பிரதேசத்தில் வெளிமாவட்ட மீனவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளால் தமது கடற்தொழில்கள் முழுமையாகப் பாதிக்கப்படுவதாக பூநகரிப் பிரதேச கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பூநகரிப் பிரதேச பாலைதீவு இரணைதீவு வலைப்பாடு கற்கடதீவு, மூன்றாம் பிட்டி, ஆகிய ஆழ்கடல் பகுதிகளில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், சட்ட விரோதத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமது தொழில்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக இப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, நாளொன்றுக்கு 30 வரையான நண்டு வலைகள் கடலில் இடப்படுகின்றன. எனினும், வலைகளல் சிக்குகின்ற நண்டைக்கூட சட்ட விரோத தொழில்களில் ஈடுபடுவோர் வெட்டிச்செல்கின்றனர். இதனால் ஒவ்வொரு கடற்றொழிலாளர்களும், நாளொன்றுக்கு 2 கிலோ கிராம் நண்டைக்கூட பிடிக்க முடியாத நிலையில் வறுமையில் வாடுகின்றனர்.
இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் முறையிட்டபோதும் இதுவரை, எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
31 minute ago
35 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
35 minute ago
45 minute ago