2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

சந்தேக நபர்கள் இருவர் தப்பியோட்டம்

George   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, தருமபுரம் பகுதியில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர்கள் இருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புபட்ட குறித்த சந்தேக நபர்கள், தருமபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதையடுத்து,சிறைச்சாலை அதிகாரிகள் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் போது சந்தேக நபர்கள் கைவிலங்குடன் தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடிய குறித்த சந்தேக நபர்கள் ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .