2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகளை பெற்றுக்கொள்ள உத்தரவு

George   / 2017 மார்ச் 13 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகளை, எதிர்வரும் 21 ஆம் திகதி பெற்றுக்கொள்ளுமாறு, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று (13) உத்தரவிட்டார்.

அத்துடன், சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிப்பமாகவும் அவர் உத்தரவிட்டார்.

ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்ற குறித்த பெண், கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இவருடைய கொலைதொடர்பில், மண்டைதீவு பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் சென்ற இருவர், அதே தினத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற போது, “முதல் முறைப்பாட்டாளரின் வாக்குமூலம், அதாவது கொலை இடம்பெற்றமை தொடர்பில், பொலிஸாருக்கு தெரியப்படுத்தியவரின் வாக்குமூலம் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை” என, நீதவானின் கவனத்துக்கு சட்டத்தரணி கொண்டுவந்தார்.

அதனையடுத்து, “வாக்குமூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்” என, நீதவான் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .