Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகள் மூவருக்கும் எதிரான சாட்சியப்பதிவு, எதிர்வரும் செப்டெம்பர் 25,26,27ஆம் திகதிகளில் இடம்பெறும் என உத்தரவிட்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்றையதினத்தில் சகல சாட்சியாளர்களும் மன்றுக்கு சமுகமளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
2009ஆம் அண்டு காலப்பகுதியில், புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம், இடைக்காடு, வக்டர் முதலாம் முகாமில் வைத்து, 18 கடற்படை வீரர்கள் மற்றும் 8 இராணுவத்தினருக்கு மரணத்தை விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அரசியல் கைதிகள் மூவரும், இன்று (23) காலை 9 மணிக்கு வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டனர்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், இராசதுரை திருவருள், மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் ஆகியோருக்கு எதிரான குற்றப்பகிர்வுப் பத்திரம், சட்டமா அதிபர் திணைக்களத்தால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, இந்த வழக்குத் தொடர்பாக நடவடிக்கைகள் எடுப்பதற்கு மேலதிக கால அவகாசம் தேவை என, அரச சட்டவாதியால் அவகாசம் கோரப்பட்டது.
அதன்பின்னர், பிரதிவாதிகள் தமது கருத்தை வெளியிடுவதற்கு அவகாசம் வழங்கப்பட்டது.
“இவ்வழக்கானது, கடந்த 4 வருடங்களாக இந்நீதிமன்றத்திலே தவணை வழங்கப்பட்டுவருகிறது. நாம் 8 வருடங்களும் 3 மாதமும் விளக்கமறியலில் இருந்து வருகிறோம். இந்த வழக்கு இதுவரை காலமும் விளக்கத்துக்கு எடுக்காததன் காரணமாக, நாம் மூவரும் கடந்த 20ஆம் திகதி முதல் சாகும் வரையான உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த வழக்கானது, இந்த நீதிமன்றத்திலேயே இடம்பெற வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் சாகும்வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பில், நீதிபதியால், சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் வினவப்பட்டபோது, இந்த பிரதிவாதிகள் மூன்று பேரும் கடந்த 20ஆம் திகதியில் இருந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என, அந்த அதிகாரி தெரிவத்தார்.
தற்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளின் உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால், அது தொடர்பில் தானே பொறுப்புக்கூற வேண்டியவனாக உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளை அன்றாடம் விளக்கத்துக்கு எடுத்து முடிவுறுத்துமாறு, பிரதம நீதியரசரால் மேல்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், இந்த வழக்கு சாட்சியப் பதிவுக்கு நியமிக்கப்படும்” என்றார். அதனையடுத்தே, மேற்குறிப்பிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago