2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சைக்கிளை திருடியவர் ஹெல்மட்டை மறந்தார்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 16 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியிலுள்ள ஆசிரியர் ஒருவருடைய மோட்டார் சைக்கிளைத் திருடிக் கொண்டு சென்ற நபரை, போக்குவரத்து பொலிஸார்  புதன்கிழமை பிற்பகல் கைதுசெய்துள்ளனர்.

புதிய பஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து குறித்த நபரை தடுத்து நிறுத்திய போக்குவரத்துப் பொலிஸார், தலைக்கவசம் இன்றி மற்றும் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியமை தொடர்பில் விசாரித்துள்ளனர்.

 அதன்போது, தேக்கவத்தைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டபோது திருடப்பட்டதாக  பொலிஸாருக்கு கிடைக்கபட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .