2025 ஜூலை 12, சனிக்கிழமை

சிறாட்டிகுளம் கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை

Gavitha   / 2017 ஜனவரி 29 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு சிறாட்டிகுளம் கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகாரித்துக் காணப்படுவதாகவும் இதனால் தாங்கள் பல்வேறு சிரமங்களையும் உயிர் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்குப்பிரதேச செயலாளர் பிரிவுக்கு கீழுள்ள சிறாட்டிகுளம் கிராமத்தில்,  தற்போது 67 வரையான குடும்பங்களும் இதனை அண்டிய உழுவன்நரி பகுதியில், 15 வரையான குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றன.

இவ்வாறு குறித்த கிராமங்களில் வாழும் மக்களின் பிரதான தொழிலாக விவசாயமே காணப்படுகின்றது. இந்நிலையில் இப்பகுதியில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.

அதாவது, மாலை 6 மணியானதும் பயிர் செய்கை நிலங்களிலும் குடிமனைக்குள்ளும் புகும் காட்டுயானைகள், பெருமளவான பயிர்  செய்கைகளையும் பயன்தருமரங்களையும் அழித்து வருகின்றன.

இவற்றை கடடுப்படுத்தும் பொருட்டு, இரவு வேளைகளில் விழித்திருந்து காவல் காக்கவேண்டிய நிலை காணப்படுவதுடன், உயிர் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்றும், தங்களது கிராமத்துக்கான பிரதான வீதியாக உள்ள நட்டாங்கண்டல் சிறாட்டிகுளம் வீதி, நீண்டதூரம் காட்டுப்பகுதியாக காணப்படுவதனால், மாலை வேளைகளிலும் அதிகாலையிலும் பயணிக்கமுடியாத நிலை காணப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .