2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

சிற்றூழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

George   / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின்  நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிற்றூழியர்கள், வௌ்ளிக்கிழமை பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

செயலாளர், சாதி பெயர்களை குறிப்பிட்டு  தகாத வார்த்தைகளை பேசி அவமானப்படுத்தி வருவதாகவும் தொடர்ந்தும் பழிவாங்கும் நோக்கோடு நடந்துகொள்வதாகவும் என்றும் அவர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.

“பழிவாங்கும் நோக்கோடு பணியாளர் ஒருவரை  பணியில் இருந்து  நிறுத்தியுள்ளார். சாதியை சொல்லி பேசிய செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மாதம், பணி பகிஸ்கரிப்பு செய்த போது, கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன், உரிய விசாரணையை மேற்கொண்டு தீர்வை பெற்றுத்தருவதாவும் தெரிவித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை இந்தக் காலப்பகுதியில் பிரதேச சபை செயலாளர் தொடர்ந்தும் பழிவாங்கும் வகையில் நடந்துகொள்வதாகவும்  பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்

இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதனிடம் வினவியபோது, “பணியாளர் ஒருவர் உரிய முன்னறிவித்தல் இன்றி விடுமுறை எடுத்தமையினால் அவர் திணைக்கள் நடமுறைகளுக்கு அமைவாக பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை தவிர இரண்டு வேலை வெளிக்கள தொழிலாளிகள்தான் ஏனைய பணியாளர்களையும் தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .